ஜோதிட முரசுமிதுனம் செல்வம்
ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஒவ்வொரு விதமான கிரக அமைப்புக்கள் மூலம், பார்வை, சேர்க்கை, ஆட்சி, உச்சம், மூலம் திரிகோணம். பஞ்ச மகா புருஷ யோகம், பலவகையான ராஜயோகங்கள் உள்ளன. இந்த வகையான யோகங்கள் சுபயோகம், சுப கத்திரி யோகம், பாப கத்திரி யோகம் எனப் பிரிவுகள் இருக்கின்றன. இதில் இந்த நீசபங்க ராஜயோகம் என்பது மிகவும் பிரபலமான யோகமாகும். இது அனுபவப்பூர்வமாகவும் மிகச் சரியாக பலன் தருகிறது. இதைக் கிராமப்புறங்களில் உள்ள பெரிய பல வகைகளில் பெரிய யோகத்தை செய்து விட்டது என்று சொல்வார்கள். அந்தளவிற்கு இந்த யோகம் மிகப் பிரசித்தமான ஒன்று. நீசம் என்பது மிகவும் தாழ்ந்த நிலையை குறிக்கும்.
கிரகத்தின் வலிமை குன்றிய அமைப்பு, எந்த கிரகம் நீச்சமோ அந்தக் கிரகத்தின் தன்மைகள், காரகத்துவங்கள் எல்லாம் நீர்த்துப் போய்விடும். அந்தக் காலத்தில் ஒருவரை மிகவும் கடும் சொற்களால் ஏசும்போது அவன் நீச்சன், நல்ல எண்ணம், நல்ல புத்தி இல்லாதவன், நீசத் தொழில், நீச்ச சேர்க்கை உடையவன் என்று சொல்வார்கள். அது இந்த கிரக நீச்சத் தன்மையை வைத்து சொல்லப்பட்டது. எல்லா கிரகங்களும் ஒவ்வொரு வீட்டில் நீச்சம் அடையும். நீச்சம் பெற்ற கிரகம் நீச்ச தன்மையிலேயே இருந்தால் அந்த கிரகத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் ஒரு 20 சதவிகிதம் கூட கிடைக்காது. இதே நேரத்தில் அந்தக் கிரகத்திற்கு நீச்ச பங்கம் ஏற்பட்டு இருந்தால் மிகப் பெரிய ராஜயோகத்தை கொடுத்துவிடும். சூரியன் துலா ராசியில் நீசம் அடையும். அதாவது ஐப்பசி மாதம் பிறந்தவர்களுக்கு சூரியன் நீசமாக இருப்பார். சந்திரன் விருச்சிக ராசியில் நீசம். குரு மகர ராசியில் நீசம். புதன் மீன ராசியில் நீசம். சுக்கிரன் கன்னி ராசியில் நீசம். சனி மேஷ ராசியில் நீசம். செவ்வாய் கடக ராசியில் நீசம்.
நீச கிரகம் எப்போது ராஜயோகம் கொடுக்கும்?
நீசன் நின்ற ராசிக்குடையவன் ஆட்சி, உச்சம் பெற்றால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் பரிவர்த்தனையில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச்ச கிரகம் வர்க்கோத்தமம் அடைந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம் பார்ப்பது நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் நவாம்ச சக்கரத்தில் உச்சம், ஆட்சி பெற்றால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் வக்கிரமாக இருந்தால்
நீச பங்க ராஜயோகம்.
‘‘அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டு விக்கிறான் என்றும் நடவாதது என்ன முயன்ராலும்நடவாது, நடப்பது என் தடை செய்யினும் நில்லாது…’’இந்தச் செய்யுள் பகவான் ஸ்ரீரமணரின் அருள் வாக்காகும். எத்தனையோ மகான்கள், இந்த பாரத புண்ணிய பூமியில் அவ்வப்பொழுது தோன்றி பல்வேறு வகையான அருளுரைகள், ஞானவிசாரங்கள், போதனைகள் போன்றவற்றை செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். அந்த வகையில் பல ஆயிரம் நூற்றாண்டுகளாக பல்வேறு விதமான சாஸ்திரக கலைகள் நம் இந்து மதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இதில் மிகவும் பிரசித்தி பெற்றதும், தலையாயதும் ஆன சாஸ்திரம்தான் ஜோதிடம். இந்த சாஸ்திரத்தின் மூலம் பல்வேறு விஷயங்களுக்கு வாழையடி வாழையாக, எந்தை, தந்தை, தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படி கால் தொடங்கி வழிவழியாக இந்த ஜோதிட சாஸ்திர விஷயங்கள், ஸ்லோகங்கள், நுணுக்கங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கையில் வந்துபோகின்ற எல்லா விஷயங்களையும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு வழிவகை செய்துள்ளனர். அந்த வகையில் நாம் இப்போது தனம் - செல்வம் எனும் பணம் பற்றி அறிந்துகொள்ளப் போகிறோம்.
புல்லாகிப் பூண்டாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
சொல்லா அ நின்ற இத் தாவர, சங்கமத்துள்…
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்று சொல்கிறது. அத்துடன் பொல்லாவினை என்று குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட வினைப்பிறவிப் பயனை அனுபவித்து, அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பதற்கேற்ப, இறைவன் அருள்கூர்ந்து கருணையுடன். இந்த மனிதப் பிறவியை தந்துள்ளான். ஆகவே நமக்கு கிடைக்கின்ற எந்த யோகமும். அதிகமோ, குறைவோ எல்லாம் நாம் வாங்கி வந்த வரம். அதன்படி கிரகங்கள் நமக்கு அந்தந்த காலகட்டத்தில் உரிய யோக பாக்கியங்களை தருகின்றன. அந்த வகையில் நமக்கு தனம் எனும் பணம் எப்படி சேரும். இதற்கான கிரக அமைப்புகள் என்ன, கிரகச் சேர்க்கைகள், பார்வைகள், யோகங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட அமைப்புகள்
இன்றைய காலகட்டத்தில் பணம், பொருள் வளம், செல்வச் சேர்க்கை, சொத்து சேர்க்கை, அளப்பரிய பணப் பொழிவு, பணப் புழக்கம், பணம் புரட்டுவது என்பது மிக முக்கியமான வாழ்வாதார பிரச்னையாகும். பணம் இருந்தால் பலவற்றைச் சாதிக்கலாம். பணம் பத்தும் செய்யும். சிலர் அது என்னிடம் இருந்தால் பதினொன்றும் செய்யும் என்று சொல்வார்கள். ஈட்டி எட்டும் வரை பாயும். பணம் பாதாளம் வரை பாயும். பை நிறைய பணம் இருந்தால் பத்து யானை பலம். பணம் பந்தியிலே என்று சொல்வார்கள். அதாவது, பணம் படைத்த செல்வந்தனுக்கு பெரிய வரவேற்பு, மரியாதை இருக்கிறது என்று பொருள். இப்படிப்பட்ட செல்வம் சேரும் யோகம். ஒரு சிலருக்கு எளிதில் அமைகிறது.
தொழில், வியாபாரம், வேலை வாய்ப்பு, வட்டி, வரவு, செலவு, ஷேர் மார்க்கெட், கட்டிட வாடகைகள், புரோக்கர், கமிஷன் ஏஜென்சி என்று எத்தனையோ நூற்றுக்கணக்கான வகையில் தனவரவு உண்டாகிறது. தேவையுள்ள அளவிற்குப் பணம் கிடைக்கிறது. சிலருக்கு உபரியாகப் பணம் சேமிப்பு ஆகிறது. பலருக்கு பல்வேறு வகைகளில் வருமானம் குவிகிறது. இதன் மூலம் பொன், பொருள், அசையும், அசையா சொத்துகள் அமைகிறது.
ஒரு பகுதியினருக்கு பற்றாக்குறை என்பது எப்பொழுதும் உள்ளது. கடன் வாங்கி செலவு செய்வது என்பது சிலருக்கு மாதாமாதம் ஏற்படும் அனுபவமாகும். சிலர் அன்றாடம் வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது. பலர் பல விஷயங்களுக்காக ஏதாவது உருட்டல், மிரட்டல் செய்தே காலத்தை தள்ள வேண்டியுள்ளது. கையில் காசு பணம் தங்காத நிலை, வட்டி, வட்டிக்கு வட்டி, கடன், நகைக் கடன், வங்கிக் கடன் வாகனக் கடன், வீடு, நிலம் வாங்கியதில் கடன் என்று பணம் பல்வேறு வகைகளில் கையில் இருப்பு இல்லாத அமைப்பு பலருக்கு உள்ளது.
தன யோகம் - சொத்து யோகம்.
ஜாதகத்தில் சில வீடுகள், ஸ்தானங்கள், கிரகங்கள் தனித்தனியே ஒவ்வொரு விஷயத்தையும் குறிப்பிடுவதாக இருந்தாலும், ஒருவருக்கு பல நிலைகளில், பல்வேறு கிரக சேர்க்கை, பார்வை, யோகங்கள் மூலம் தான் எந்த விஷயமும் தீர்மானிக்கப்படுகிறது. ஜாதகம் என்றவுடன் முதலில் நிற்பது இரண்டு கட்டங்கள். ஒன்று ராசிக் கட்டம் அடுத்தது நவாம்ச கட்டம். இதற்கு அடுத்தபடியாக மிக, மிக முக்கியமான இடம் லக்னம், லக்னாதிபதி, ஏனென்றால் இந்த இடத்தில் இருந்துதான் ஒருவரின் ஜாதகம் இயக்கப்படுகிறது. லக்னாதிபதி என்ற கிரகம் தான் இயக்குநர், அதிபர், உயர் அதிகார பதவி வகிப்பவர். அந்த லக்னம் என்ற இடத்தில் இருந்து தான் மற்ற ஸ்தானங்கள் கணக்கிடப்படுகின்றது.
இதற்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் பெறுவது நவாம்சம் என்ற கட்டம். அந்தக் கட்டத்தில் உள்ள லக்னம், லக்னாதிபதி பலம் மிகவும் முக்கியம். பொதுவாக தனயோகம் என்பது 1,2,5,9,11 ஆகிய இடங்கள் மற்றும் அந்த இடத்தின் அதிபதிகள் மூலம் ஒருவருக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இரண்டாம் இடம் தனஸ்தானம். செல்வ நிலையைப் பற்றி தெரிவிக்கும் இடம். ஐந்து, ஒன்பது ஆகிய இடங்கள். பல்வேறு வகையில் தன பிராப்தி, சொத்து சேர்தல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர் யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து போன்றவற்றை குறிக்கும். பதினொன்றாம் இடம். பல வகையில் வருவாய், லாபம் பற்றிப் பேசும் இடம்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் உழைப்பு மிக முக்கியம், பொருளாதாரம் சற்று உயரும் அதே நேரத்தில் யோகமும், அம்சமும், பாக்கியமும் சேர்ந்து யோகமும், அம்சமும், பாக்கியமும் சேர்ந்து இருந்தால் தனம் எனும் பணம் கொட்டும். யோகம் என்றால் சேர்க்கை, பார்வை என்று பொருள். உப்பில்லா பண்டம் குப்பையிலே யோகம் இல்லாத ஜாதகமும் அதைப் போலவே, ஆனால் எந்த ஜாதகமாக இருந்தாலும் அதில் ஏதாவது வகையில் யோகம் இருக்கும். எந்த அளவில் உள்ளது என்பதில்தான் விஷயம் உள்ளது. இதில் அளவு என்பது நாம் வாங்கி வந்த வரம், கொடுப்பினை, அம்சம், இந்த கர்மா நமக்கு நல்ல அம்சத்தில் இருந்தால்
நிச்சயம் செல்வ வளம், தன பிராப்தி, பண மழை கொட்டும்.
மேலும் தனயோகம் ராஜயோகங்கள் இருந்தாலும் தீய கிரக சேர்க்கை, தீய யோகங்கள், நீச்ச யோகங்கள் மற்றும் நவாம்ச சக்கரத்தில் கிரகபலம், பார்வை பலம், யோகபலம், பரல் பலம் போன்றவை குறைந்த ஜாதகங்கள், நீச தசை, பாதக ஸ்தான தசை, விரய ஸ்தான தசை போன்ற பலம் குறைந்த தசா நடக்கும் ஜாதகங்கள் அடிக்கடி சரிவை சந்திக்கும். வாழ்க்கைப் பாதை சகட யோகம் போல் மாறி, மாறி ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். கிரக யோகமும், ராஜயோக தசையும், அனுபவிக்கும் பாக்கியமும் ஒருங்கே அமைந்தால் தான் குபேர தன சம்பத்து சித்திக்கும் என்பது பராசரர், வராகமிகிரர் போன்ற ஜோதிட கர்த்தாக்களின் கூற்றாகும்.
ஆன்மா, கர்மா, பிராப்தம்ஜாதகக் கட்டம் என்பது நாம் பிறக்கின்ற நேரத்தில் நவகிரகங்கள் எந்தெந்த ராசி வீடுகளில் அமைந்துள்ளது என்பதை நமக்கு தெரிவிக்கின்ற ஒரு அம்சமாகும். இவையெல்லாம் நம் கர்மக் கணக்கின்படி முன் கூட்டியே இறைவனால் தீரமானிக்கப்படுகின்ற விஷயமாகும். இந்த ஆன்மா எங்கு, எப்படி, எந்த சூழ்நிலையில், எப்படிப்பட்ட கிரக சஞ்சார அமைப்புகளுடன் எந்த தசையில் மாதா கர்ப்பத்தில் உதிக்க வேண்டும் என்பது இறைவனின் படைப்பாகும். அதுதான் நம்முடைய கர்ம வினை. சமுதாயத்திலே ஒரு பேச்சு வழக்கு உண்டு.
அதாவது ‘‘நாம் என்ன கொண்டு வந்தோம், எதை எடுத்துச் செல்லப் போகிறோம்’’ என்று சொல்வார்கள், இது தெரிந்தோ, தெரியாமலோ பேச்சு வழக்கில் வந்து விட்டது. இது முற்றிலும் தவறானது. நாம் பல்வேறு விதமான நல்வினை, தீவினைகளை கொண்டு வந்து இருக்கின்றோம். அந்த வினைப் பயன்களை அனுபவித்து முடித்தபின் இந்த பிறவியில் செய்த வினைப்பயன்களை கொண்டு செல்கின்றோம். இதைத்தான் மாணிக்கவாசகர் பின்வருமாறு தனது திருவாசகத்தில்அருளியுள்ளார்.
வீடுகள் - ஸ்தானங்கள்
ஒரு ஜாதகத்தில் கேந்திரம் என்பது 1,4,7,10 விஷ்ணு ஸ்தானங்கள். ஒரு ஜாதகத்தில் கோணம் என்பது 1,5,9 : லட்சுமி ஸ்தானங்கள். ஒரு ஜாதகத்தில் பண வரவு ஸ்தானம் என்பது 2,5,8,11. தன வரவு, பணம் வரும் வழிகள் 2ஆம் இடம் தனம், வாக்கு சாதுர்யம், உடல் உழைப்பு இல்லாமல் மூளையை பயன்படுத்தி பேச்சின்மூலம் பணம் சேர்க்கும் வழியைச் சொல்கிறது. ஐந்தாம் இடம் யோசனை, சிந்தனை, பூர்வ புண்ணியம், அதிர்ஷ்டம், உழைப்பில்லாத செல்வம், வெறும் வாய் ஜாலம், வார்த்தை ஜாலத்தால் பொருள் ஈட்டுவது, ஆடிட்டர், வக்கீல், பொறியாளர், இயல், இசை, நாடகம் போன்ற துறைகளில் உள்ளவர்கள் திட்டங்கள் தீட்டிக் கொடுத்து சம்பாதிப்பது யோசனை சொல்லி செல்வம் திரட்டுவது. நான்காம் வீட்டிற்கு இரண்டாம் வீடு கல்வியின் மூலம் பணம் சேருவதைக் குறிக்கும். தாய், தாய்மாமன் வர்க்கம் மூலம் பணம் கிடைப்பதைக் குறிக்கும். 8 மற்றும் 11.
இரண்டாம் வீட்டிற்கும், எட்டாம் வீட்டிற்கும் பார்வைத் தொடர்பு உண்டு. இந்த இடங்களில் எந்த கிரகம் இருந்தாலும் தன் 7வது பார்வையால் பார்க்கும் எட்டாம் இடம் மறைமுக பணவரவு, வரதட்சணை, உயில் சொத்து, லாட்டரி, ரேஸ், புதையல் என பல வகைகளில் பொருள் குவியும். செல்வம் பல வகைகளில் சேரும் அந்தக் கணக்கில் அனுபவப்பூர்வமாகப் பெரும்பாலானோருக்கு மனைவி மூலம் சொத்து, சம்பாத்தியம் கிடைத்து யோகம் வருகிறது. மனைவி மூலம் சொத்து என்றால் மாமனார் மூலம் உதவி, சொத்து பாகப்பிரிவினை, உயர் தொழில், வியாபாரம் என்று பணம் சேரும். இதற்கு லக்னத்திற்கு 3ஆம் இடம் நமக்கு பதில் தருகிறது. மூன்றாம் அதிபதி ஆட்சி, உச்சம், கேந்திரம், கோணம் வர்கோத்தமம் பெற்று இருந்தாலும் மூன்றாம் வீட்டை புதன், சுக்கிரன் அல்லது யோக கிரகங்கள் பார்த்தாலும் மூன்றாம் வீட்டில் 35 பரல்களுக்கு மேல் இருந்தாலும் மாமன், மச்சான் வகை மூலம் சொத்து, பணம் குவியும்.
இது நேர்வழி பாக்யராஜயோக அமைப்பாகும். ஒரு சிலருக்கு 3,6,8,12 ஆகிய கிரகங்கள் பலம் பெற்று ஒருவருக்கொருவர் பார்வை பரிவர்த்தனை போன்றவை ஏற்பட்டு, லக்னாதிபதி, யோகாதிபதி பார்வை உண்டாகி விபரீத, ராஜயோக தசை நடைபெறும்போது அளப்பரிய செல்வம் சேரும். இந்த அமைப்பு ஒருவருக்கு சரியாக கைகொடுத்தால் எந்த உச்சநிலைக்கும் கொண்டு செல்லும்.
பொதுவான சிறந்த தன பாக்கியங்கள்
இந்த தனயோகங்கள் ஒருவர் ஜாதகத்தில் இருந்தால் அவரவர் பூர்வ புண்ணிய பலத்திற்கு ஏற்ப கூடியும், குறைந்தும் அல்லது மிதமான, சராசரியான செல்வ வளத்தைப் பெருக்கித் தரும்.
கேந்திர யோகம்: லக்னம் 4,7,10 ஆகிய இடங்களில் சுப, யோக கிரகங்கள் இருந்தால், சதுரகேந்திர யோகமாகும். இது எல்லா வகையான ஏற்றத்தையும் கொடுக்கும்.
லட்சுமி யோகம்: லக்கினத்திற்கு இரண்டாம் அதிபதி ராசி, அம்சத்தில் வலுவாக இருந்து தனகாரகன் குரு பலமாக இருந்து, தனகாரகன், தனஸ்தானாதிபதி தொடர்பு ஏற்பட்டால் லட்சுமி யோகம், பொன், பொருள், செல்வம் சேரும்.
செல்வ யோகம் : எட்டாம் இடத்தில் யோகாதிபதிகள் இருந்தாலும், குரு அல்லது சுக்கிரன் இருந்தாலும், இவர்கள் தன ஸ்தானத்தை பார்ப்பதால் இவர்கள் தசா புக்தி காலங்களில் திடீர் செல்வச் சேர்க்கை உண்டாகும்.
தெய்வாம்ச யோகம் : சந்திரனுக்கு நாலுக்குடையவன் கேதுவை சேர்ந்தாலும், கேதுவிற்கு கேந்திரத்தில் இருந்தாலும், ஜாதகன் தெய்வாம்சம் நிறைந்தவன். தாயார் வழியிலும் கட்டிட, நில புலன்கள் மூலம் செல்வம் கிடைக்கும்.
தன யோகம்: தனகாரகன் குரு, ஆட்சி, உச்சம் வர்கோத்தமம் சுபர் சேர்க்கை மற்றும் தனஸ்தானாதிபதி எந்த கிரகமோ அது, ஆட்சி, உச்சம் வர்கோத்தமம் சுபர் சேர்க்கை பெற்று இருந்தால் வற்றாத ஜீவநதி போல் திரண்ட செல்வம் இருக்கும். சந்திராதி யோகம், சந்திரமங்கள யோகம்: சந்திரன் ரிஷபத்தில் இருந்து (உச்சம்) செவ்வாய். விருச்சிகத்தில் (ஆட்சி) அதுபோல மகரத்தில் செவ்வாய் இருந்து (உச்சம்) சந்திரன். கடகத்தில் (ஆட்சி) இப்படிப்பட்ட மிக உன்னதமான சம சப்தம் பார்வை உடன் கூடிய ராஜயோக அம்சமாகும். இந்த அமைப்புடன் பிறந்தவர்கள் மிகப் பெரும் பாக்கியசாலிகள். சாதாரணமாக நாம் சொல்லும்போது அவருக்குள்ள சொத்து, செல்வம், தனவரவு அவருக்கே தெரியாது என்று சொல்வோம். அந்தளவிற்கு யோக பாக்யம் உண்டு.
கிரகச் சேர்க்கை - பரிவர்த்தனை
கிரகச் சேர்க்கை என்பது ஏதாவது ஒரு ராசியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருப்பது. பார்வை என்பது ஒரு ராசியில் இருக்கும் கிரகம் மற்றொரு ராசியில் இருக்கும் கிரகத்தைப் பார்ப்பது. இந்த வகையில் நிறை, குறைகள் இருக்கும். ஆனால், பரிவர்த்தனை என்பது இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது. இந்த யோகத்தால் பரிவர்த்தனை பெற்ற கிரகங்களின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். இரண்டாம் அதிபதியும், 11ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் தொட்டது துலங்கும். பணம் கொட்டும். இரண்டாம் அதிபதியும் 5 ஆம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் திடீர் யோகம், மாமன் வர்க்கம் மூலம் யோகம், குழந்தைகள் மூலம் செல்வம் குவியும்.
2 ஆம் அதிபதியும் 9 ஆம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் சொத்து சுகம், பிதுரார்ஜித சொத்து கிடைக்கும். தான தர்மங்கள் செய்வான். 9ஆம் அதிபதியும், 10 ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் அதிகாரம், புகழ், மந்திரி யோகம், தர்ம காரியங்கள், அறக்கட்டளை நிறுவும் யோகம் உண்டு. இந்த அமைப்பிற்கு தர்ம கர்மாதிபதி யோகம் என்று சொல்வார்கள்.
இதேபோல் லக்னாதிபதியுடன் 2,5,9,10, 11 போன்ற இடத்தின் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் அதிபுத்திசாலி, அதிகாரப் பதவி, தொழில் அதிபர், பல்தொழில் வித்தகர். இவர்களிடம் சேரும் பணத்தை இயந்திரத்தைக் கொண்டுதான் எண்ண முடியும். அந்தளவிற்கு செல்வம் குவியும்.
கிரக மாலிகா யோகம்
லக்னத்தில் இருந்து 7ம் இடம் வரை தொடர்ந்து எல்லா வீட்டிலும் கிரகம் இருந்தால் புகழ், செல்வம், கீர்த்தி, வாழ்க்கைத் துணையால் யோகம் பெறுவர். லக்னத்தில் இருந்து 2 மற்றும் மூன்றாம் இடம் வரை கிரகம் இருந்தால் பாக்ய யோகம் பொன், பொருள் வளம் உண்டு. லக்னத்தில் இருந்து தொடர்ச்சியாக 5ம் வீடு வரை கிரகங்கள் இருந்தால், செயல்திறன், நுண்ணறிவுமிக்கவர். தர்ம ஸ்தாபனம் ஏற்படுத்தும் யோகம் உள்ளவர்.
தசம தனலட்சுமி யோகம்
தசமம் என்பது பத்தாம் இடத்தை குறிக்கும். பத்தாம் இடம் என்பது தொழில், வியாபாரம் சம்பந்தமாக பேசப்படுகின்ற இடம். இந்த இடத்தின் அதிபதி நல்ல யோகநிலையில் இருந்தால் தொழில் மூலம் வருவாய் பெருகும். பத்தாம் இடத்தின் அதிபதியும், இரண்டாம் இடத்தின் அதிபதியும் சம்பந்தம், பார்வை, சேர்க்கை, பரிவர்த்தனை ஆட்சி உச்சம், வர்கோத்தமம் பெற்று ராசி, நவாம்சம் இரண்டு கட்டங்களிலும் முழு பலத்துடன் இருந்தால் தொழில் யோகம், தொழில் மேதை என்ற உயர்ந்த அந்தஸ்து உண்டு. ஒரு தொழில் தொடங்கி ஒன்பது தொழிலில் கால் பதிக்கின்ற ராஜயோகத்தை கிரகம் தரும். 10ம் வீட்டிலும், 2ம் வீட்டிலும் 35 பரல்களுக்கு மேல் இருக்கும் ஜாதகம் நிச்சயம், அந்த ஜாதகரை உயர் தொழில் அதிபராக உண்டாக்கிவிடும்.
பத்தும் - நான்கும்
பத்தாம் இடம் வியாபாரம், தொழில், நான்காம் இடம் சுகம், மண், மனை, வீடு இந்த இரண்டு இடங்களும் ஒன்றுக்கொன்று கேந்திரங்கள் 10ம் வீட்டில் இருக்கும். கிரகம் 4ஆம் வீட்டைப் பார்க்கும். 4ம் வீட்டில் இருக்கும் கிரகம் 10ம் வீட்டை பார்க்கும்.
‘‘கூறப்பா கருமாதி நூலில் தோன்ற
கொற்றவனே குடிநாதன் கோணம் இரண்டில்.
ஆரப்பா வாகனமும்
செம்பொன் கிட்டும்,
கூடப்பா கோவில் திருப்பணிகள் செய்வான்’’
புலிப்பாணி பாடல், என்ற புலிப்பாணி சித்தரின் பாடல்படி கருமாதி என்ற 10ம் அதிபதி 4ல் இருக்க அந்த 4ம் வீட்டிற்குடையவன். கோணம் என்னும் 5 அல்லது 9ல் இருக்க வாகனம், பொன், பொருள் தர்ம கைங்கர்யத்துடன் இருப்பான் என்று சொல்கிறார்.
குரு - கேது
வியாபார ஸ்தானமாகிய 10ம் வீட்டின் மூலம்தான் பணம் ஈட்ட முடியும். அந்த வீட்டுடன் 4ம் வீடு சம்பந்தப்படும்போது, புதையல், சொத்து, பூமி லாபம், செல்வ வளம் உண்டாகிறது. அத்துடன் குரு தனகாரகன், கேது கோடீஸ்வர யோகத்தை அருளக்கூடியவன். குருவும் - கேதுவும், ஜாதகத்தில் 1ல்,4ல்,5ல்.8ல்,10ல் இருந்து இருவரும் சேர்க்கை பார்வை சாரபரிவர்த்தனை பெற்றால் குபேர தனம் கிட்டும் என்பது உத்திரகாலாமிர்தம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.
சந்திரன் - சுக்கிரன்
சந்திரனுக்கு நான்கில் சுக்கிரன் அல்லது சுக்கிரனுக்கு நான்கில் சந்திரன் அல்லது லக்னத்திற்கு நான்கில் சந்திரன் சுக்கிரன் சேர்ந்து இருந்து லக்னாதிபதி பலம் அடைந்தால் சிறப்பான தாரை யோகமாகும். அதனால் வாகனம், பொன், பொருள், பெண்களால் மகிழ்ச்சி, தாய் வழி சொத்து, மனைவி வழியில் யோகம் உண்டு.
