நிலக்கோட்டை அருகே கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்-பொதுமக்கள் அதிர்ச்சி

நிலக்கோட்டை : நிலக்கோட்டை கண்மாயில்,ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.நிலக்கோட்டை, செம்பட்டி, ஆத்தூர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நிலக்கோட்டையில் பலத்த மழை பெய்தது. அதில் அதிகமான தண்ணீர் ராஜ வாய்க்கால் வழியாக,  செங்கட்டான்பட்டி கண்மாய், நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாய்க்கு வரும் போது மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது.மீன்கள் செத்து மிதப்பது குறித்து அறிந்த அப்பகுதி மீன் வியாபாரிகள் கண்மாயில் மீன்கள் செத்து மிதக்கும் மீன்களை வியாபாரத்திற்கு அள்ளி செல்கின்றனர். மீன்கள் எதனால் இறந்தது என்று காரணம் தெரியாமல் இருக்கும் நிலையில் இறந்த மீன்களை வியாபாரிகள் விற்பனைக்காக எடுத்து சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தகவலறிந்து வந்த நிலக்கோட்டை காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தில் இறந்த மீன்களை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்தனர். மேலும் கொங்கர்குளம் வரத்து வாய்க்கால் மற்றும் நீர்நிலைகளுக்குள் அத்துமீறி யாரும் இறங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்….

The post நிலக்கோட்டை அருகே கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்-பொதுமக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: