×

வில்லனாக நடிக்கிறார் ஆர்யா

சென்னை: விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ என்ற படத்துக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி யில் நடந்து வருகிறது. நீலம் புரொடக்‌ஷன்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ‘அட்ட கத்தி’ தினேஷ் ஹீரோவாக நடிக்க, வில்லனாக ஆர்யா நடிக்க சம்மதித்துள்ளார். அவர் ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். எனவே, பா.ரஞ்சித் கேட்டதற்காக ‘வேட்டுவம்’ படத்தில் வித்தியாசமான வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

Tags : Arya ,Chennai ,Vikram ,Parvati Thiruvothu ,Malavika Mohanan ,Ranjit ,Karaikudi ,Neelam Productions ,Golden Ratio Films ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு