சசிகலா, தினகரன் இருந்தால் அதிமுக பலமாக இருக்கும்; ஓபிஎஸ் ஆதரவாளர் ஜெ.சி.டி.பிரபாகர் பேட்டி

சென்னை: சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்தால் பலமாக இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் நம்புவதாக அவரது ஆதரவாளர் ஜெ.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: போடி தொகுதியில் ஜானகி கட்சியில்  தலைமை ஏஜென்டாக ஓ.பி.எஸ் இருந்தார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது தவறானது செய்தி. ஜானகி ஒன்றும் தீண்ட தகாதவர் இல்லை, இரட்டை இலைக்காக தியாகம் செய்தவர் ஜானகி.எடப்பாடி பழனிசாமியின் சமீபகால பேச்சு கட்சியை ஒற்றுமைப்படுத்துவதாக எனக்கு தெரியவில்லை. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் செல்லும் உரிமை ஓ.பி.எஸ்.சுக்கு இருக்கிறது.தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என கூறும் அளவிற்கு தான் எடப்பாடிக்கு தகவல் தெரியும். யாரோ ஒருவரின் பிடியில் கட்சி செல்ல கூடாது என கூறிதான் ஓபிஎஸ் தர்மயுதம் மேற்கொண்டார். தற்போது கட்சியின் ஒற்றுமைக்காகவும், வளர்ச்சிக்காக மட்டுமே ஓபிஎஸ் அனைவரையும் அரவணைத்து வருகிறார். காவல்துறை முழுமையான சிசிடிவி காட்சியை வெளியிட்டால் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு யார் காரணம் என அனைவருக்கும் தெரியும். சசிகலாவைப் பற்றி கூறும்போது, ஒரு  குடும்பத்திற்குள் கட்சி சென்று விட கூடாது என அன்று சொன்னோம். அதேபோல  இப்போது கட்சி 5 பணக்காரர்களுக்குள் செல்ல கூடாது என தெரிவித்து வருகிறோம். சசிகலா, தினகரன் கட்சியில் இருப்பது பலமாக இருக்கும் என ஓ.பி.எஸ். நம்புகிறார். எப்போது சந்தித்து அழைப்பு விடுக்க வேண்டும் என்பதெல்லாம் ஓபிஎஸ் தான் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்….

The post சசிகலா, தினகரன் இருந்தால் அதிமுக பலமாக இருக்கும்; ஓபிஎஸ் ஆதரவாளர் ஜெ.சி.டி.பிரபாகர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: