சோதனை ஓட்டம் வெற்றி 180 கிமீ வேகத்தில் பறந்த வந்தே பாரத்: ரயில்வே அமைச்சர் பெருமிதம்

புதுடெல்லி:  ரயில்வேயில் பல்வேறு நவீனமயங்கள் புகுத்தப்படுகின்றன. பயண நேரத்தை குறைப்பதற்காக, ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதன் ஒரு அம்சமாக, முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு வரும் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில்களை மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்க சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  ‘ரயில்-18 எனப்படும் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயிலின் சோதனை ஓட்டம் நடந்தது. ‘வந்தே பாரத்-2 என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த வேக சோதனையில், முதலில் மணிக்கு 120 கிமீ, 130 கிமீ, 150 கிமீ என்ற வேகத்தில் பயணித்து, கோட்டா-நாக்டா இடையே சென்றபோது மணிக்கு 180 கிமீ வேகத்தில் ரயில் பாய்ந்தது,’ என்று கூறியுள்ளார்.* தற்போது இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரசுக்கு பதிலாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. * இந்த ரயில்கள் 16 பெட்டிகளையும், இரு முனைகளிலும் இன்ஜின்களை கொண்டது. * ரயில் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது. * 180 கிமீ வேகத்தை வந்தே பாரத் எட்டி இருப்பதால், விரைவில் பல்வேறு பாதைகளில் இது இயக்கப்படும் என தெரிகிறது.* வரும் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் புதிதாக 75 வந்தே பாரத் ரயில்களை உற்பத்தி செய்ய ஐசிஎப் இலக்கு நிர்ணயித்துள்ளது. …

The post சோதனை ஓட்டம் வெற்றி 180 கிமீ வேகத்தில் பறந்த வந்தே பாரத்: ரயில்வே அமைச்சர் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: