ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: மக்களுக்கு எதிராக ஆளுநர்  செயல்படுவதாலும், வகுப்புவாத  சக்திகளுடன் கைகோர்த்து செயல்படுவதாலும், அவரை  உடனே திரும்பப் பெற  வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின்  ஆளுநர் பொறுப்பை ஆர்.என்.ரவி ஏற்றதிலிருந்து, தன் ஆர்.எஸ்.எஸ் முகத்தை வெளிப்படையாக  காண்பித்துக் கொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகவே ஜி.யு.போப்பின்  திருக்குறள் மொழிபெயர்ப்பு திருத்தப்பட்டதாக பொய்யான தகவலை  தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நலன்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே  தொழிலாக கொண்டுள்ள  ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார்களின்  ஊதுகுழலாகவே செயல்பட்டு ஆளுநர் பதவிக்கு இழுக்கை ஏற்படுத்திக்  கொண்டிருப்பது அரசியல் சாசனத்துக்கே அவமானமாகும். நீட் மசோதா முதல்  துணைவேந்தர்கள் நியமனம் வரை முட்டுக்கட்டை போட்டு தமிழர்களுக்கு எதிராக  செயல்படும் ஆர்.என்.ரவி, தற்போது வகுப்புவாதத்தை கையில் எடுத்து குழப்பத்தை  ஏற்படுத்தி வருகிறார். மக்களின் பிரச்னைகள் குறித்துத்தான் ஆளுநர்  சிந்திக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான்  ஆட்சியமைக்கின்றனர், மசோதாவை நிறைவேற்றுகின்றனர். அதை ஆதரிக்காமல்,  மக்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாலும், வகுப்புவாத சக்திகளுடன்  கைகோர்த்து செயல்படுவதாலும், அவரை உடனே திரும்பப் பெற வேண்டும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது. …

The post ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: