பெல், எல் அண்ட் டி உட்பட 544 இந்திய நிறுவனங்கள் விக்ராந்துக்கு பங்களிப்பு

கொச்சி: உள்நாட்டில் கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் தயாரிப்பில் 544 இந்திய நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்தியாவில் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், வரும் செப்டம்பர் 2ம் தேதி கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. இது தொடர்பாக கடற்படை துணை அட்மிரல் ஹம்பிஹோலி கூறியதாவது:இந்திய கடற்படையில் விக்ராந்த் சேர்ப்பது மேக் இன்  இந்தியா முயற்சிக்கான ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். உள்நாட்டில் விமானம் தாங்கி கப்பல் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இது சேர்க்கின்றது. இந்த கப்பல் மிக் 29கே போர் விமானங்கள், காமோவ்-31, எம்எச்-60ஆர் மல்டி ரோல் ஹெலிகாப்டர்கள் , உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்கள், இலகு ரக போர் விமானங்கள் உட்பட 30 விமானங்களை இயக்கும் திறன் கொண்டது. கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்துடன் இந்தியாவை சேர்ந்த 544க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் விக்ராந்தை தயாரிப்பதில் முக்கிய பங்களித்துள்ளன. பெல், பிஎச்இஎல், எல்அண்ட்டி , கிர்லோஸ்கர் உள்ளிட்டவை இதில் அடங்கும். கள் வழங்கப்பட்டுள்ளது. உபகரணங்கள் மற்றும் சேவைகள் மூலம் கப்பலின் செலவில் சுமார் 76 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியாகும். அதாவது ரூ.15000 கோடியாகும்.இவ்வாறு கூறினார்.3 கப்பல்கள் தேவைநாட்டிற்கான பல்வேறு அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்த பின்னர் இந்தியாவின் கடற்படைக்கு மூன்று விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் தேவை என்பது உணரப்பட்டுள்ளதாக துணை அட்மிரல் தெரிவித்துள்ளார். கிழக்கு கடற்பரப்பில் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் மேற்கில் ஒன்று மற்றும் மூன்றாவது ஒன்றாகும்.  …

The post பெல், எல் அண்ட் டி உட்பட 544 இந்திய நிறுவனங்கள் விக்ராந்துக்கு பங்களிப்பு appeared first on Dinakaran.

Related Stories: