பஞ்சாப் கிங்ஸ் கேப்டன், பயிற்சியாளர் மாற்றம்?

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக கடந்த சீசனில் மயங்க் அகர்வால் அணியை நடத்தினார். இதில் பஞ்சாப் அணி 6வது இடத்தை பிடித்து பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் அடுத்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வாலை நீக்கிவிட்டு ஜானிபேர்ஸ்டோவை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த 3 சீசனிலும் பயிற்சியாளராக செயல்பட்ட அனில்கும்ப்ளேவின் செயல்பாட்டிலும் திருப்தி இல்லாததால் அவரும் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.ட்ரெவர் பேலிஸ் அல்லது இயோன் மோர்கன் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது. அகர்வால் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். அவர் எங்களுக்கு முக்கியமான வீரராக அணியில் இருப்பார். கும்ப்ளேவை பொறுத்தவரை, நாங்கள் சில விருப்பங்களைப் பற்றி விவாதித்து வருகிறோம், ஆனால் எதுவும் இன்னும் உறுதி செயல்படவில்லை. எங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது என அணி நிர்வாகி தெரிவித்துள்ளார்….

The post பஞ்சாப் கிங்ஸ் கேப்டன், பயிற்சியாளர் மாற்றம்? appeared first on Dinakaran.

Related Stories: