கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: பேருந்துகளை டிராக்டர் மூலம் இடித்து சேதப்படுத்திய இளைஞர் நீதிமன்றத்தில் சரண்

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி கலவரத்தின் போது பள்ளி பேருந்துகளை டிராக்டர் மூலம் இடித்து சேதப்படுத்தியதாக இளைஞர் ஒருவர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், உறவுகள்- பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, 4 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதற்கு மறுநாளான ஜூலை 17ம் தேதி, பெரும் போராட்டமாக உருவெடுத்து, பள்ளிகள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், பள்ளிகளில் பெரும்பாலான பொருட்கள் சூறையாடப்பட்டது. இந்நிலையில், இந்த கலவரம் தொடர்பான வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பள்ளி பேருந்துகளை டிராக்டர் மூலம் இடித்து சேதப்படுத்திய நபரை தொடர்ந்து தேடி வந்த நிலையில், பங்காரம் கிராமத்தை சேர்ந்த 22 வயதான ஜெய்வேல் என்ற இளைஞர், தான் தான் டிராக்டர் மூலம் பேருந்தை சேதப்படுத்தியதாக கூறி, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தின் நீதிபதி முன்பு இன்று ஆஜரானார். இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், எஸ்.பி. நேரில் ஆஜராகி, இவர் டிராக்டர் மூலம் பேருந்தை இடித்தது உண்மை என்றால் அதற்கான ஆதாரங்களை கொடுக்குமாறு சிறப்பு புலனாய்விடம் நீதிபதி கேட்டுள்ளார். அதிகாரிகள் ஆதாரங்களை அளித்த பின்பு, இவர் சிறையில் அடைக்கப்படுவாரா? அல்லது நீதிமன்ற காவலா? என்பது முடிவு செய்யப்பட உள்ளது.     …

The post கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: பேருந்துகளை டிராக்டர் மூலம் இடித்து சேதப்படுத்திய இளைஞர் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Related Stories: