கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: மத்திய அமைச்சர் பேட்டி

திருச்சி: கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று திருச்சியில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் கூறினார். திருச்சி மாவட்டம் அதவத்தூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் நிறுவன தினம் மற்றும் வாழை வயல் தின விழாவில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் இன்று காலை விமானத்தில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திர போராட்டத்தில் சாவர்க்கர் ஈடுபடவில்லையென தமிழகத்தில் மட்டுமே சொல்லப்பட்டு வருகிறது. தமிழக மக்களின் ஆதரவு பாஜகவுக்கு அதிகரித்து வருகிறது. தேசிய பாதுகாப்புக்காக சீன உளவு கப்பலை தீவிரமாக ஒன்றிய அரசு கண்காணித்து வருகிறது. இவ்வாறு மத்திய இணையமைச்சர் முரளிதரன் கூறினார்….

The post கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: மத்திய அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: