தண்டவாளத்தில் பழுதடைந்து நின்றது லாரி; விபத்தில் இருந்து தப்பிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்

கோவை: கோவை- மேட்டுப்பாளையம் இடையே ரயிலின் வேகத்தை அதிகரிக்க தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. லெவல் கிராசிங் உயர்த்தப்பட்டு வருவதால் அதை கடக்கும் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் அச்சு முறிந்து தண்டவாளத்தில் நின்றுவிடுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். 8.45 மணிக்கு துடியலூர் ரயில்வே கேட் மூடப்பட இருந்தது. அப்போது அந்த வழியே 30 டன் டாஸ்மாக் மதுபானம் ஏற்றிய லாரியின் அச்சு முறிந்து தண்டவாளத்தின் நடுவே நின்றது.  தகவல் அறிந்து துடியலூர் கேட் கீப்பர் அருகில் உள்ள என்ஜிஜிஓ காலனி கேட் கீப்பருக்கு  தகவல் தெரிவித்தார். அவர் இது குறித்து ரயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்து சிவப்பு விளக்கை காட்டினார். இதையடுத்து வேகம் குறைக்கப்பட்டு பழுதாகி நின்ற லாரியின் அருகே 100 அடி தூரத்தில் ரயில் நின்றது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் பொக்லைன் இயந்திரம், கிரேன் வரவழைக்கப்பட்டு லாரிஅப்புறப்படுத்தப்பட்டது. இதனால், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக  ரயில் புறப்பட்டு சென்றது….

The post தண்டவாளத்தில் பழுதடைந்து நின்றது லாரி; விபத்தில் இருந்து தப்பிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் appeared first on Dinakaran.

Related Stories: