பெரியார் சிலை குறித்து அவதூறு; முன்ஜாமீன் கோரி ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மனு: செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை: பெரியார் சிலை குறித்து அவதுாறாக பேசிய விவகாரத்தில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் முன் ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை மதுரவாயலில், கடந்த 1ம் தேதி நடந்த கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவு செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பங்கேற்று பேசியபோது, ‘ரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்’ என்றார்.அவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததையடுத்து, சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.  இந்தப் புகாரின் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார், கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, கனல் கண்ணன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது….

The post பெரியார் சிலை குறித்து அவதூறு; முன்ஜாமீன் கோரி ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மனு: செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: