பலன் தரும் ஸ்லோகம் (தேவியின் கருணை கிட்ட)

ஸகுங்கும விலேபனா மளிகசும்பி கஸ்தூரிகாம்

ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸசரசாப பாசாங்குசாம்

அசேஷ ஜனமோஹினீ மருண மால்ய பூஷாம்பராம்

ஜபாகுஸும பாஸுராம் ஜபவிதௌ ஸ்மரே தம்பிகாம்

- லலிதா த்யான ஸ்லோகம்

பொதுப் பொருள்: குங்குமப்பூச்சு தரித்தவளும், வண்டுகள் நாடும் கஸ்தூரி பூசியவளும், புன்னகை பூத்த பார்வையுடையவளும், அம்பு, வில், பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தரித்தவளும், எல்லா மக்களையும் மோகிக்கச் செய்பவளும், சிகப்பு மாலை, ஆபரணம், புத்தாடை அணிந்தவளும், தேவதைகளின் கூட்டத்தால் எப்போதும் வணங்கப்படுபவளும், செம்பருத்திப் பூவின் நிறமுடையவளுமான அம்பிகையை ஜப காலத்தில் தியானிக்க வேண்டும். ஆதிசங்கரர் தன் ஸௌந்தர்ய லஹரியின் 45ம் ஸ்லோகமான அராலை  எனும் ஸ்லோகத்தில் மலர்ந்த புன்சிரிப்புடனும், பிரகாசிக்கும் பல்வரிசையுடனும், நறுமணத்துடனும் கூடிய உன் முகத் தாமரையால் மன்மதனை எரித்த சிவனின் கண்கள் எனும் தேன் வண்டுகள் மயங்குகின்றன. அப்படிப்பட்ட உன் திருமுகம் இயற்கையாகவே சுருண்டு, சிறு வண்டுகள் பறப்பன போன்ற அழகினை உடைய முன் நெற்றி மயிர்களால் சூழப்பெற்று தாமரையின் அழகைப் பரிகாசிப்பது போல் உள்ளது என போற்றிப்பாடியுள்ளார். தேவியின் முகத்தாமரையும் பாத கமலங்களும் எப்போதும் என்றென்றும் பக்தர்களைக் காத்தருளும்.

Related Stories: