நல்ல வீடு அமைய வேண்டுமா?

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இன்றியமையாத விஷயங்கள்: உணவு - உடை - உறைவிடம். அதில் மிக முக்கியமானது உறைவிடம். ஒவ்வொரு மனிதனுடைய அடிப்படையான விஷயங்களில் முக்கியமானது வீடு. தனி வீடு என்ற கலாச்சாரம் மாறி அடுக்குமாடி குடியிருப்புகளின் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் எந்த எந்த திசையை பார்த்து எது எப்படி அமைய வேண்டும் என்று சொல்வதற்கு சில விஷயங்கள் ஜாதகத்தில் ஆராய வேண்டியிருக்கிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் தலைவாசல் தான் பிரதானமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர காவலுக்கு போடப்பட்டிருக்கும் இரும்பு கதவையோ (Gate) அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவாக அனைவரும் நுழையக்கூடிய வாசல்களையோ நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

வீடு அமைய பொதுவான பரிகாரம்:

நவகிரகங்களில் செவ்வாய் பூமிகாரகன் என்று பெயர். செவ்வாயினுடைய அதிதேவதை முருகன். யாருக்கெல்லாம் சொந்த வீடு மனை வேண்டும் என்று அவர்கள் முருகனை வழிபடுவதன் மூலம் சொந்த வீடு மனை பாக்கியம் அமையும்.

இனி ஒவ்வொரு ராசிக்காரர்களும் ராசிக்காரர்களுக்கும் எந்த எந்த திசை அமைந்தால் நல்லது என்பதை பார்க்கலாம்

மேஷ ராசி கிழக்கு மற்றும் வடக்கு

ரிஷப ராசி கிழக்கு மற்றும் தெற்கு

மிதுன ராசி மேற்கு மற்றும் தெற்கு

கடக ராசி வடக்கு மற்றும் மேற்கு

சிம்ம ராசி கிழக்கு மற்றும் வடக்கு

கன்னி ராசி கிழக்கு மற்றும் தெற்கு

துலா ராசி மேற்கு மற்றும் தெற்கு

விருச்சிக ராசி வடக்கு மற்றும் மேற்கு

தனுசு ராசி கிழக்கு மற்றும் வடக்கு

மகர ராசி கிழக்கு மற்றும் தெற்கு

கும்ப ராசி மேற்கு மற்றும் தெற்கு

மீன ராசி வடக்கு மற்றும் மேற்கு

இனி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வீடு அமைய வழிபடுவதற்கான தெய்வங்களை பார்க்கலாம்:

மேஷராசி - அம்பாள்

ரிஷப ராசி  - சிவன்

மிதுன ராசி  - பெருமாள்

கடக ராசி - அம்பாள்

சிம்ம ராசி  - முருகன்

கன்னி ராசி - சித்தர்கள் மற்றும் காவல் தெய்வம்

துலா ராசி - விநாயகர்

விருச்சிக ராசி - பைரவர் மற்றும் காவல் தெய்வம்

தனுசு ராசி - முருகன்

மகர ராசி - அம்பாள்

கும்ப ராசி - காவல் தெய்வங்கள் மற்றும் குலதெய்வம்

மீன ராசி - பெருமாள்

இனி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் உரிய அதிர்ஷ்ட வண்ணங்களை பார்க்கலாம்

மேஷம் - வெள்ளை

ரிஷபம் - நீலம் மற்றும் வெள்ளை

மிதுனம் - பச்சை மற்றும் மஞ்சள்

கடகம் - மஞ்சள் மற்றும் வெள்ளை

சிம்மம் - நீலம் மற்றும் மஞ்சள்

கன்னி - பச்சை மற்றும் வெள்ளை

துலாம்  - வெள்ளை மற்றும் நீலம்

விருச்சிகம்  - நீலம் மற்றும் மஞ்சள்

தனுசு - வெள்ளை மற்றும் மஞ்சள்

மகரம்  - பச்சை நீலம் வெள்ளை

கும்பம்  - நீலம் மஞ்சள்

மீனம் - மஞ்சள் மற்றும் வெள்ளை

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்தெந்த மாதங்களில் வாஸ்து பூஜை செய்தால் நல்லது:

மேஷம் - சித்திரை ஆடி ஆவணி ஐப்பசி தை

ரிஷபம் - வைகாசி ஆவணி கார்த்திகை மாசி

மிதுனம் - ஐப்பசி மாசி

கடகம் - சித்திரை ஆவணி ஐப்பசி

கார்த்திகை தை

சிம்மம் - வைகாசி ஆவணி கார்த்திகை மாசி

கன்னி - வைகாசி ஆடி ஐப்பசி

துலாம் - சித்திரை ஆடி ஐப்பசி மாசி தை

விருச்சிகம் - வைகாசி ஆவணி கார்த்திகை மாசி

தனுசு - சித்திரை ஆவணி ஐப்பசி தை

மகரம் - சித்திரை வைகாசி ஆடி ஐப்பசி தை

கும்பம் - வைகாசி ஆவணி கார்த்திகை மாசி

மீனம் - சித்திரை ஆடி கார்த்திகை.

தொகுப்பு: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர்

Related Stories: