கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், விநய் ராய், லால், யோகி பாபு, டிஜே பானு நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ என்ற ரொமான்ஸ் திரில்லர் படம் நாளை திரைக்கு வருகிறது. யு.கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். படம் குறித்து நித்யா மேனன் கூறுகையில், ‘எப்போதுமே ஒரு படத்தின் கதையை நான் ஆர்வத்துடன் கேட்கும்போது, இந்தக் கதை அப்படியே திரையில் வருமா என்று மிகப்பெரிய சந்தேகம் ஏற்படும்.
ஆனால், இப்படத்தில் கதையும், காட்சிகளும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிருத்திகா எனக்கு நல்ல பிரெண்ட். அவர் ஒரு ரைட்டராகவும், இயக்குனராகவும் கலக்கியுள்ளார். இந்த செட்டில் அனைவருமே எந்தவித ஈகோவும் இல்லாமல் இயல்பாக இருந்தனர். படம் நன்றாக வர அதுவும் ஒரு காரணமாகும். இப்படம் ரோம்காம் இல்லை. நிறைய டிராமா இருக்கிறது. அதை கிருத்திகா மிக அருமையாக கையாண்டுள்ளார். இப்படத்தில் நான் நடித்தது, உண்மையிலேயே எனக்கு அதிக பெருமை அளிக்கக்கூடியது. இப்படம் எனக்கு மிகவும் பிடித்திருப்பதை போல், ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.