100 நாள் வேலை திட்டத்தில் மோசடி: இறந்த பெண்ணுக்கு சம்பளம் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த செல்வசேகரன் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையிடம் கொடுத்த புகாரில், எனது அம்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலை செய்து வந்த நிலையில், 2020 மார்ச் 26ல் மரணமடைந்தார். அவரின் ஏடிஎம் கார்டை வந்தவாசி தாலுகா அமுதூர் பஞ்சாயத்து செயலாளர் கேட்டு மிரட்டுகிறார் என்று போலீசில் புகார் அளித்தார். இதன் மீது நடவடிக்கை எடுக்காததால், செல்வசேகரன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி விசாரணை நடத்துமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது. லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இறந்தவரின் கணக்கில் சம்பளத்தொகை டெபாசிட் ெசய்யப்பட்டுள்ளதும், ஒரு குறிப்பிட்ட தொகை அவரது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.  எனவே, இது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி, வழக்கு பதிவு செய்து தவறு செய்துள்ள அரசு ஊழியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்….

The post 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி: இறந்த பெண்ணுக்கு சம்பளம் ஐகோர்ட் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: