ஆவின் பாக்கெட்டில் பால் எடை குறைந்தது எப்படி? ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: குறைவான எடையில் பால் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:ஆவின் பால் அளவு குறைவாக இருக்கிறது என்று கடந்த சில நாட்களாகவே மக்கள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், அதனை நிரூபிக்கும் விதமாக அரை லிட்டர் பாலுக்குப் பதிலாக 430 கிராம் மட்டுமே இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுபோன்ற எடைகுறைப்பு செயல்களில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் க தனிக்கவனம் செலுத்தி, குறைவான எடையில் பால் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும். …

The post ஆவின் பாக்கெட்டில் பால் எடை குறைந்தது எப்படி? ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: