பாகிஸ்தானில் கனமழை… மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மாயம்

பலுசிஸ்தான்: பலுசிஸ்தானில் மூத்த அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மாயமாகி உள்ள நிலையில், அதனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதாவது, பலுசிஸ்தான், சிந்து, கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு உதவும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மீட்பு பணியில் பாகிஸ்தான் ராணுவ ஹெலிஹாப்டர் ஒன்று ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த ஹெலிஹாப்டர் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஹெலிஹாப்டரில் நிவாரணப் பணிகளை மேற்பார்வை செய்து வந்த கமாண்டர் ஜெனரல் சர்ப்ராஸ் அலி உட்பட மொத்தம் ஐந்து மூத்த ராணுவ அதிகாரிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த ராணுவ அதிகாரிகள் நிலை என்ன என்று தெரியாமல் ஹெலிஹாப்டரை தேடும் பணியை முடுக்கி விடப்பட்டுள்ளது. …

The post பாகிஸ்தானில் கனமழை… மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: