நவகிரகத்தால் ஏற்படும் நோய்கள் மற்றும் அது நீங்க வழிமுறைகள்!!

வியாதிகள் தோன்றி மனித இனத்தை துன்புறுத்துகின்றன. இத்தகைய நோய்கள் ஏற்பட வெளிப்புற காரணங்கள் பல இருந்தாலும், ஒரு நபரின் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் பாதகமான நிலைகளும் நோய்கள் ஏற்பட முதன்மையான காரணமாக இருக்கிறது என்பது ஜோதிடர்களின் வாக்காகும். அப்படி நமக்கு கிரகங்கள் மூலமாக ஏற்படக்கூடிய நோய்கள் என்ன என்பதை கொள்ளலாம்.

சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய்களையும் ஜுரம் போன்றவையும் உண்டாகும். சந்திரன் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் ஏற்படும்.

செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்புகள். புதன் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் நோய்கள் ஏற்படும்.

குரு ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு போன்றவை. சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பு வியாதிகள் ஏற்படும்.

சனி ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிப்பு போன்றவை. ராகு ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் போன்றவை ஏற்படும். கேது ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு போன்றவை உண்டாகும்.

மேலே கூறப்பட்டுள்ள நவகிரகங்கள் நமது ஜாதகத்தில் பாதகமான கட்டங்களில் இருக்கும் போது பல வகையான நோய்களை நமக்கு தருகிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் அதற்குரிய முறையான பரிகாரங்கள், வழிபாட்டு முறைகளை நாம் பின்பற்றுவதால் எத்தகைய நோய்களும் நம்மை அண்டாதவாறு நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Related Stories: