நித்யானந்தா ஆச்சர்யம் 3 மாதத்தில் உலகமே மாறி போயிருக்கே… சமாதி நிலையில் இருந்து எழுந்தார்

புதுடெல்லி: சமாதிநிலையில் இருப்பதாக அறிவித்திருந்த நித்யானந்தா திடீரென தோன்றி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்க அங்கு  இருப்பதாக கூறி வரும் நித்யானந்தா, சமாதி நிலையில் இருந்து பேசுவதாக கூறி, தொடர்ந்து சில கருத்துக்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில், குருபூர்ணிமா நாளான ஜூலை 13ம் தேதி மீண்டும் நேரில் தோன்றுவதாக அவர் அறிவித்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு சமூக வலைதளங்கள் மூலம் நேரில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது நித்தியானந்தா பேசியதாவது: இந்த நன்நாளில் என்னையே என் குரு பரம்பரைக்கு அர்ப்பணித்து 42-வது நிகழ்வை தொடங்குகிறேன். இன்றிலிருந்து 42-வது சாதுர்மாசியத்தை தொடங்குகிறேன்.இன்று முதல் சத்சங்கங்கள் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். உலகத்திற்கு நாம் செய்ய வேண்டிய நற்பணிகள் அதிகம் இருக்கிறது. திடீரென கண்ணை திறந்து பார்த்தால் 3 மாதம் கழித்து உலகம் மொத்தமாக மாறி இருக்கிறது. நிறைய சொல்லலாம். 3 மாதம், எனக்கு ஒரு யுகம். கடந்த 3 மாதத்தில் எனது உடல், மூளை அனைத்தும் மாறி இருக்கிறது. இனிமேல் என்னிடமும், பூஜைகளிலும் மாற்றத்தை காண்பீர்கள். இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை. இனி வரும் நாட்களில் நான் சொல்ல வேண்டியதை சொல்கிறேன். அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்பட்ட புதிய தொடக்கம் மற்றும் முடிவுகள் ஆகியவற்றை பார்க்கும்போது இந்த 3 மாத கால இடைவெளியில் நடந்தது உங்களுக்கு புரியும். இவ்வாறு அவர் பேசினார்….

The post நித்யானந்தா ஆச்சர்யம் 3 மாதத்தில் உலகமே மாறி போயிருக்கே… சமாதி நிலையில் இருந்து எழுந்தார் appeared first on Dinakaran.

Related Stories: