×

பரபரப்பு ஏற்படுத்திய திரிஷாவின் இன்ஸ்டா பதிவு

சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை திரிஷா, தற்போது அஜித் குமார் ஜோடியாக ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ மற்றும் கமல்ஹாசன், சிம்புவுடன் ‘தக் லைஃப்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா’, மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ராம்’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவர், தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகியுள்ளது.

அதில் அவர், ‘நான் மனிதர்களை தவிர்த்துவிடுகிறேன். நாய்களை நேசிக்கிறேன். எனது நாய் மற்ற நாய்களை தவிர்த்துவிடுகிறது. மனிதர்களை நேசிக்கிறது. நாம் இணைந்து நேசம் மிகுந்த சமூகத்தை உருவாக்குவோம்’ என்று பதிவிட்டுள்ளார். எந்த நோக்கத்துக்காக இதை அவர் பதிவிட்டுள்ளார் என்று நெட்டிசன்களும், ரசிகர்களும் ஆளாளுக்கு ஒரு கருத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

Tags : Trisha ,CHENNAI ,Ajith Kumar ,Kamal Haasan ,Simbu ,Chiranjeevi ,Mohanlal ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்