தாழம்பூர் ஊராட்சியில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால்வாய் பணிகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதையடுத்து, திடீரென திருப்போரூர் ஒன்றியம் தாழம்பூர் ஊராட்சியில் டிஎல்எப் குடியிருப்பு அருகே நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் அவர் பார்வையிட்டு பணிகளை வருகிற மழைக்காலத்திற்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர். தாழம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி முதல்வரை வரவேற்று புத்தகம் மற்றும் பொன்னாடை வழங்கினார். இதைத்தொடர்ந்து டிஎல்எப் குடியிருப்புவாசிகள் முதல்வரை சந்திக்க காத்திருப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து, முதல்வர் காரை விட்டு இறங்கி அவர்களிடம் சென்று சிறிது நேரம் பேசினார். டிஎல்எப் குடியிருப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வரிடம் தங்களது குடியிருப்பு நிலம் அனாதீனத்தில் சேர்க்கப்பட்டு விட்டதால் பத்திரப்பதிவு தடைபட்டிருப்பதாகவும் அதை நீக்குமாறு கோரிக்கை வைத்ததோடு, மழைக்காலங்களில் வெள்ள சேதம் ஏற்படாமல் இருக்க மழைநீர் வடிகால்வாய் அமைத்ததற்கு நன்றியும் தெரிவித்தனர்….

The post தாழம்பூர் ஊராட்சியில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: