லக்கிம்பூர்கெரி: ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர். மத மோதலை தூண்டும் வகையில் டிவிட்டரில் பதிவு வெளியிட்டதற்காக, உபி போலீசார் கடந்த மாதம் இவரை கைது செய்தனர். கடந்த 8ம் தேதி உச்சநீதிமன்றம் ஜூபைருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால் இன்னொரு வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே, கடந்த ஆண்டு உபி மாநிலம் லக்கிம்பூர் கெரியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிருபரான ஆஷிஷ் கட்டியார் என்பவர் தன்னுடைய தொலைக்காட்சி குறித்து மக்களை தவறாக திசை திருப்பும் வகையில் ஜூபைர் டிவிட் செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக ஜூபைருக்கு கடந்த வாரம் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முகமது ஜூபைரை காவல் துறையினர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். இதை விசாரித்த கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் ஜூபைரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்….
The post ஜூபைருக்கு 14 நாள் காவல்: உபி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.