செபி தலைவர் மீது ராகுல் தாக்கு முதலாளிகளுடன் பிக்சிங் முதலீட்டாளர்கள் தோல்வி

புதுடெல்லி: ‘அதானி போன்ற கோடீஸ்வர முதலாளிகளை பாதுகாக்க மேட்ச் பிக்சிங் நடக்கும் போது, சாதாரண முதலீட்டாளர்கள் படுதோல்வி அடைவார்கள்’ என செபி தலைவர் மாதபி புச்சை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய தலைவர் மாதபி புச் மற்றும் தொழிலதிபர் அதானி ஆகியோரை குறிவைத்து, பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா மற்றும் மூத்த பத்திரிகையாளர் சுசேதா தலால் ஆகியோருடன் உரையாடும் வீடியோவை ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

8 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவுக்கு ‘இத்தோடு நிறுத்துங்கள் புச்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவுடன் ராகுல் காந்தி தனது பதிவில், ‘‘உங்களின் முதலீடுகள் பாதுகாப்பாக உள்ளதா? எப்போது போட்டியில் பிக்சிங் நடக்கிறதோ, அப்போது அனைவருக்கும் தோல்வி நிச்சயம். சாமானிய முதலீட்டாளர்களுக்கே இழப்புகள் அதிகம் இருக்்கும்’’ என கூறி உள்ளார். இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியும் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

The post செபி தலைவர் மீது ராகுல் தாக்கு முதலாளிகளுடன் பிக்சிங் முதலீட்டாளர்கள் தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: