இன்று தேர்தல் நடக்கும் நிலையில் மகாராஷ்டிரா வாக்காளர்களுக்கு ரூ.5 கோடி பட்டுவாடா?: பாஜ தலைவர் சிக்கினார்

மும்பை: மகாராஷ்டிராவில் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில பாஜ பொது செயலாளர் வினோத் தாவ்டே பால்கர் மாவட்டம் நாலாசோபாராவில் உள்ள ஓட்டலில் வைத்து வாக்காளர்களுக்கு ரூ.5 கோடி பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக பகுஜன் விகாஸ் அகாடி தலைவர் ஹிதேந்திர தாக்கூர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். மேலும் தாவ்டே தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்ற தாக்கூர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாவ்டேயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பகுஜன் விகாஸ் அகாடியினர் ஓட்டல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த குற்றச்சாட்டை பாஜ முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் தேர்தல் அதிகாரிகள் தாவ்டே தங்கியிருந்த ஓட்டலில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ரூ.9 லட்சம் பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வினோத் தாவ்டே மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

 

The post இன்று தேர்தல் நடக்கும் நிலையில் மகாராஷ்டிரா வாக்காளர்களுக்கு ரூ.5 கோடி பட்டுவாடா?: பாஜ தலைவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: