ட்விஸ்ட் வைத்த ஓபிஎஸ்: அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமியை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு

சென்னை: பரபரப்புக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் கூட்டம் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிலும் குறிப்பாக அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றபட்டது. அதிமுக அடிப்படை உறுப்பினர், பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்குவதற்கான சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்பட்டனர். மறுபுறம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னிர்செல்வம் ஆலோசனை நடத்தி வந்தார். பின்னர் அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்; என்னை அதிமுகவில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி, கே.பி.முனுசாமியை நான் நீக்குகிறேன். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, என்னை நீக்கியத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம். இவ்வாறு தெரிவித்தார். …

The post ட்விஸ்ட் வைத்த ஓபிஎஸ்: அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமியை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: