குற்றாலம் ஐந்தருவி வெண்ணமடை குழாமில் படகு சவாரி

தென்காசி: குற்றாலம் ஐந்தருவி வெண்ணமடை குழாமில் படகு சவாரியை கலெக்டர் ஆகாஷ், பழனி நாடார் எம்எல்ஏ ஆகியோர் துவக்கி வைத்தனர்.குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பொழுது போக்குவதற்கு சிறந்த அம்சமாக படகு சவாரி திகழ்கிறது. குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்த ஆண்டு சீசன் துவங்கியுள்ள நிலையில் ஐந்தருவியில் ெபாங்கிப் பாயும் தண்ணீரால் குளம் நிரம்பிய நிலையில் படகு சவாரி நடத்த ஏற்பாடுகள் நடந்தது. நேற்று தென்காசி கலெக்டர் ஆகாஷ், பழனி நாடார் எம்எல்ஏ ஆகியோர் படகு சவாரியை துவக்கி வைத்தனர். ஐந்தருவி வெண்ணமடை குளத்தில் 2 இருக்கை மிதி படகுகள் 7ம், 4 இருக்கை மிதி படகுகள் 17ம், 4 இருக்கை துடுப்பு படகுகள் 5ம், தனிநபர் சவாரி செய்யும் வகையில் ஹயாக் வகை படகுகள் 4ம் ஆக மொத்தம் 33 படகுகள் உள்ளன. கட்டணமாக 2 இருக்கை பெடல் படகுகளுக்கு அரை மணி நேரத்திற்கு 150 ரூபாயும், நான்கு இருக்கை பெடல் படகுகளுக்கு 200 ரூபாயும், நான்கு இருக்கை துடுப்பு படகுகளுக்கு 250 ரூபாயும், தனிநபர் ஹயாக் வகை படகுகளுக்கு 150 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. படகு சவாரி துவங்கிய முதல் நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகு சவாரி செய்தனர்….

The post குற்றாலம் ஐந்தருவி வெண்ணமடை குழாமில் படகு சவாரி appeared first on Dinakaran.

Related Stories: