மதுரையில் இருந்து வந்த விமானம் தாமதம்: சென்னையில் 2 மணி நேரம் தவித்த ஒன்றிய அமைச்சர்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் மதுரை, திருச்சி, கோவை, டெல்லி, ஐதராபாத், விஜயவாடா, சீரடி போன்ற பகுதிகளுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்கள் வருகை நேரங்களில் சமீபகாலமாக அதிகளவில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் இணைப்பு விமானங்களில் பிடிக்க முடியாமல் ஏராளமான பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் இருந்து ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் கபில் மொரிஸ்வர் பாடீல், நேற்றிரவு 7 மணிக்கு மதுரையில் இருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக சென்னைக்கு வந்து, இரவு 8.30 மணிக்கு மும்பை செல்லும் விஸ்தாரா விமானத்தில் செல்வதற்கு ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தார். எனினும், மதுரையில் இருந்து சென்னை வரவேண்டிய விமானம் மிக தாமதமாக இரவு 8.15 மணிக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, கபில் மொரிஸ்வர் பாடீலை அவசரமாக மும்பை செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான கவுன்டருக்கு விமான நிலைய செக்யூரிட்டி பிராஞ்ச் போலீசார் அழைத்து சென்றனர். எனினும் அங்கிருந்த அதிகாரிகள், ‘போர்டிங் முடிந்துவிட்டது. நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள்’ என கூறி, ஒன்றிய அமைச்சரின் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்துவிட்டனர். இதனால் உள்நாட்டு விமான நிலைய விவிஐபி அறையில் கபில் மொரிஸ்வர் பாடீல் சுமார் 2 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு, இரவு 10.30 மணியளவில் மும்பை செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒன்றிய அமைச்சர் புறப்பட்டு சென்றார்….

The post மதுரையில் இருந்து வந்த விமானம் தாமதம்: சென்னையில் 2 மணி நேரம் தவித்த ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: