தேமுதிக உட்கட்சி அமைப்பு தேர்தல்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேமுதிக தேர்தல் பணிக்குழுவினர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கு தேர்தல் நடத்தும் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள். தேமுதிக அமைப்பு தேர்தல் குக்கிராமங்களில் உள்ள ஒன்றிய ஊராட்சி வாரியாக பூத் கிளை கழகங்கள் தொடங்கி, ஊராட்சி, பேரூர் வார்டு, நகர வார்டு என அனைத்து கழக அமைப்புகளுக்கும் 4 கட்டங்களாக தமிழகம் முழுவதும் தேமுதிக  அமைப்பு தேர்தல் நடைபெறும். இந்த தேர்தல் வரும் 10ம்தேதி தொடங்கி 24ம்தேதி என மொத்தம் 15 நாட்கள் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட அமைப்பு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதன்படி, தென்சென்னை வடக்கு மாவட்ட தேர்தல் ஆணையாளராக எம்.ஆர்.பன்னீர்செல்வம், மத்திய சென்னை மேற்கு மாவட்டத்துக்கு கிருஷ்ணமூர்த்தி என மொத்தம் கட்சி ரீதியாக உள்ள 76 மாவட்டத்துக்கும் தேர்தல் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post தேமுதிக உட்கட்சி அமைப்பு தேர்தல்: விஜயகாந்த் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: