நந்தியம்பாக்கம் ஊராட்சியில் சாலை பணிகளை அதிகாரி ஆய்வு

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் கொங்கி அம்மன் கோயில் தெரு, வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலை பழுதடைந்தது. இந்த சாலையை பயன்படுத்தும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சீரமைக்கக்கோரி ஊராட்சி மன்றத்தில் கோரிக்கை வைத்தனர். அதன்படி ஊராட்சி மன்ற தலைவர் கலாநிதி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் ₹6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மற்றும் வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலை திட்டத்திற்கு ₹9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் சாலையை சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இந்த சாலைப்பணிகளை மீஞ்சூர் ஒன்றிய ஊராட்சி பொறியாளர் செந்தில்குமார் நேரில் ஆய்வுசெய்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி, வார்டு உறுப்பினர் வள்ளி வில்வநாதன், ஊராட்சி செயலாளர் சுரேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்….

The post நந்தியம்பாக்கம் ஊராட்சியில் சாலை பணிகளை அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: