சசிகலா 3 நாட்கள் சுற்றுப்பயணம்: ஆதரவாளர்களை சந்திக்கிறார்

சென்னை: சசிகலா இன்று முதல் மூன்று நாட்கள் வானூர், திருக்கோவிலூர், உளுந்தூர்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்னை தீவிரமைடந்துள்ள நிலையில் சசிகலாவும் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். இந்தநிலையில், சசிகலா இன்று மதியம் 2 மணிக்கு தி.நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் மன்னார்சாமி கோயிலுக்கு அருகிலிருந்து தனது பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து பெருமுக்கல்-நல்லாளம் கூட்டுரோடு, பிரம்மதேசம், ஆலங்குப்பம், முருக்கேரி, கந்தாடு, மரக்காணம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்கிறார். இதையடுத்து, 7ம் தேதி மாலை 3.30 மணிக்கு திருச்சிற்றம்பலம் கூட்டுப்பாதை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு வானூர் வட்டாச்சியர் அலுவலகம், ரங்கநாதபுரம், சேமங்கலம், கீழ் கூத்துப்பாக்கம் மற்றும் கிளியனூர் கடைவீதி ஆகிய பகுதிகளில் தொண்டர்களை நேரில் சந்திக்கிறார். பின்னர், 8ம் தேதி மாலை 3 மணிக்கு உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிகளில் உளுந்தூர்பேட்டை நகராட்சியிலிருந்து புறப்பட்டு திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட களமருதூர், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரசூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஆதரவாளர்களை சந்திக்கிறார்….

The post சசிகலா 3 நாட்கள் சுற்றுப்பயணம்: ஆதரவாளர்களை சந்திக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: