பகவதியம்மன் கோயில் திருவிழா

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெம்மாரா  வல்லங்கி நெல்லிக்குளங்கரை பகவதியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. இக்கோயிலில் நேற்று காலை 4 மணிக்கு கணபதி பூஜைகளுடன் நிகழ்ச்சி துவங்கி தொடர்ந்து அம்மனின் பரவட்டங்கள் செண்டை வாத்யங்களுடன் அழைத்து வருதல் நிகழ்வுகள் நடந்தது. பின் தங்க காப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வல்லங்கி பிரிவினர் சேராமங்கலம் சிவன்கோயிலிருந்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது அம்மன்  பஞ்சவாத்யம், செண்டை வாத்யங்கள் முழங்க வீதியுலா வந்து மற்றும் நெம்மாரா பிரிவினர் வேட்டைக் கொருமகன் கோயிலில் இருந்து அலங்காரிக்கபட்ட யானை மீது அம்மன் திருவீதியுலா புறப்பட்டு நெம்மாரா அக்ரஹாரம், கடைவீதி, பஸ் நிலையம் வழியாக கோயில் வளாகம் வந்தடைந்தனர்.

Related Stories: