விவசாயிகளுக்கு நன்மைகள் செய்யும் நானோ யூரியா: விவசாயிகள் பயன்படுத்த கலெக்டர் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: விவசாயிகளுக்கு நன்மை செய்யும் நானோ யூரியாவை விவசாயிகள் பயன்படுத்தவேண்டும் என காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெற அரசு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நானோ யூரியா என்பது இலை வழியாக தெளித்திட உகந்த தழைச்சத்து உரமாகும். இதில், சாதாரண யூரியா குருணையைவிட பல மடங்கு சத்து அதிகம் உள்ளது. அதை பலப்பல துகள்களாக சிறிது சிறிதாக நானோ துகள்களாக பிரிக்கும்போது அதிக தழைச்சத்தை அளித்திட வாய்ப்புள்ளது.இதனை, இலை வழியே தெளிக்கும்போது உடனடியாக பயிரின் பல பாகங்களுக்கும் எடுத்து செல்லப்படுவதால் விரைவில் பச்சை கட்டும் நன்மையும் நமக்கு கிடைக்கிறது. தன் தேவையை விட கூடுதலாக தழைச்சத்து உட்கிறகிக்கப்பட்டால் அதனை செல்லின் உட்புறம் உள்ள வேக்யோல் எனும் சில பகுதியில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் தருணம் எடுத்து பயன்படுத்த முடிகிறது. இதனால், உர விரயம் என்ற பேச்சே இல்லை. முதல் மேலுரம் மற்றும் 2ம் மேலுரம் யூரியாவிற்கு பதிலாக நானோ யூரியா 500 மிலி தெளித்தாலே 45 கிலோ யூரியா இட்டதன் பலனை அடையலாம்.உரச்செலவில், சிக்கனம் மட்டுமல்ல நானோ யூரியாவின் சிறப்புகளில் சுற்றுப்புறச்சூழல்கேடு நேர்வதில்லை. அதிக களைகள் வளரவும் வழியில்லை. எந்தவித பக்க விளைவுகளும் இல்லை, மண் நீர்ப்பகுதிகளில் நஞ்சு கலக்க வழியே இல்லை. எனவே, சுற்றுப்புறச்சூழல் காக்கப்படுவது மட்டுமல்லாமல், பிற உயிரினப் பெருக்கம் மூலமாக உணவுச்சங்கிலி உடைபடுவதில்லை. உர உபயோகத்திறன் மேம்பாடு குறையில்லா பயிர் வளரும் சூழல் நன்மை செய்யும் உயிரினத்துக்கு சேதமில்லாத சூழல் நிலவுவதால் நானோ யூரியா நன்மைகள் பல தரும் உரமாக உள்ளது. எனவே, அனைவரும் இதனைப்பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விபரங்கள் பெற 98420 07125 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்….

The post விவசாயிகளுக்கு நன்மைகள் செய்யும் நானோ யூரியா: விவசாயிகள் பயன்படுத்த கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: