2026 ஜனவரி 9ம் தேதி ரிலீசாகிறது: பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் பான் இந்தியா படம்

ஐதராபாத்: மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்க, பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஆக்‌ஷன் படத்தின் தொடக்க விழா, ‘என்டிஆர் நீல்’ என்ற தற்காலிக தலைப்புடன் நடந்தது. ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’, ‘சலார்’ ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீலுடன் என்டிஆர் இணைந்து பணிபுரியும் பான் இந்தியா படமாக உருவாகிறது.

இப்படத்தின் தொடக்க விழா பூஜை நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இதில் என்டிஆர், பிரசாந்த் நீல் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி, ஹரி கிருஷ்ணா கொசராஜு தயாரிக்கின்றனர். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். பிரசாந்த் நீல் எழுதி இயக்கும் இப்படம், எந்தப் படத்துடைய ரீமேக்கும் இல்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.

The post 2026 ஜனவரி 9ம் தேதி ரிலீசாகிறது: பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் பான் இந்தியா படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: