கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

குளித்தலை: சிவத்தலங்களில் காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி காவிரி கடம்பன் துறையில் இருக்கும் சிவதலமாக கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் இருந்து வருகிறது. இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் மாசிமக பெருந்திருவிழா 13 நாள் நடைபெறுகிறது. இவ்விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் இரவு சுவாமி அலங்காரத்தில் மஞ்சள் கேடயம், யாழி வாகனம், அன்ன வாகனம், கமல வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், நடைபெறுகிறது.

5ம் நாளான பிப்ரவரி 16ம் தேதி அன்று காலை 11 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இவ்விழாவில் முக்கிய விழாவான மாசிமகத்தேரோட்டம் 9ம் நாள் பிப்ரவரி 19 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு சுவாமி அலங்காரத்துடன் வீதியுலா நடைபெறும். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை உதவி ஆணையர் சூரியநாராயணன், செயல் அலுவலர் வேல்முருகன், கோயில் சிவாச்சாரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.