குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் தைப்பூச தீர்த்தவாரியில் 8 ஊர் சுவாமிகள் சங்கமம்

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் மிகவும்  பிரசித்தி பெற்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கடம்பவனேஸ்வரர் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் கடம்பர்கோயில் அருள்மிகு முற்றிலா முலையம்மை உடனுறை கடம்ப வனேசுவரர் திருக்கோயில், அய்யர்மலை சுரும்பார் குழலி உடனுறை இரத்தின கிரிசுவரர் திருக்கோயில், பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்யார் சுனேசுவரர் திருக்கோயில், இராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்யார் சுனேசுவரர் திருக்கோயில், திருஈங்கோய்மலை மரகதாம்பாள் உடனுறை மரகதாச லேசுவரர் திருக்கோயில், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமௌலீசுவரர் திருக்கோயில், வெள்ளர் சிவகாமி உடனுறை திருக்காமேசுவரர் திருக்கோயில் ஆகிய 8 ஊர் திருக்கோவில்களில் எழுந்தருளியுள்ள சுவாமிகள் மற்றும் அம்பாள் காவிரியில் எழுந்தருளி சுவாமிகள் சந்திப்பு மற்றும்  தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று மாலை நடை பெற்றது.

இவ்விழாவில் 8 கோவில்களில் இருந்து சோமஸ்கந்தர் அம்பாள்களுடன் வெள்ளி ரிசப வாகனத்தில் பக்தர்களுக்கு  காட்சியளித்தது. ஏராளமான பக்தர்கள் பக்தி  பரவசத்துடன் நீராடி வணங்கி சென்றனர். டிஎஸ்பி சுகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Related Stories: