தாராபுரம் அருகே காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம் கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக 12 புண்ணிய நதிகளிலிருந்து புனித நீர் தீர்த்த கலசங்கள் கொண்டுவரப்பட்டு 60 வகையான மூலிகை திரவியங்களால் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன முற்றிலும் தமிழ்மறைகள் ஓதப்பட்டு புனித நீரை ஊற்றி கோபுரக்கலசங்களுக்கு கும்பாபிசேகம் செய்யப்பட்டது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் தலைமயில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், அன்னதானம்  வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: