கன்னியாகுமரியில் 75வது சுதந்திர தினவிழா புகைப்படக் கண்காட்சி: ஒன்றிய இணை அமைச்சர் தொடங் கிவைத்தார்

கன்னியாகுமரி: ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் கன்னியாகுமரியில், 75-வது சுதந்திர தினவிழா புகைப்படக் கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. இதனை ஒன்றிய ரயில்வே, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சர் ராவ் சாஹேப் பாட்டீல் தன்வே  தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று அதிகம் அறியப்படாத வீரர்களை போற்றும் விதமாக நடத்தப்படும் இது போன்ற கண்காட்சிகள், விடுதலைப் போராட்டத்தின் அதிகாரபூர்வ தகவல்களை வழங்குவதுடன் இளம் தலைமுறையினரிடையே தேசப்பக்தி உணர்வை ஊட்டி வருகிறது என்றார். பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் எம்.அண்ணாதுரை வரவேற்றார்.  தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக தென்மண்டல தலைமை இயக்குநர் எஸ்.வெங்கடேஸ்வர் தலைமை தாங்கினார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா இர்சி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எம்.அரவிந்த்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் ஜெ.காமராஜ் நன்றி கூறினார்….

The post கன்னியாகுமரியில் 75வது சுதந்திர தினவிழா புகைப்படக் கண்காட்சி: ஒன்றிய இணை அமைச்சர் தொடங் கிவைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: