மீண்டும் இணைந்த தசரா கூட்டணி

ஐதராபாத்: கடந்த 2023ல் நானி நடிப்பில் திரைக்கு வந்து ஹிட்டான படம், ‘தசரா’. இப்பட கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஹீரோவாக நானி நடிக்கும் இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். இது நானி நடிக்கும் 33வது படமாகும். ஸ்ரீலஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார்.

இப்படம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட போஸ்டர், ரத்தம் தெறிக்கும் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. பின்னணியில் நானியின் முகமும், அவர் ஸ்டைலாக சிகரெட் புகைக்கும் காட்சியும், ‘தலைவராக இருக்க அடையாளம் தேவையில்லை’ என்ற வாசகமும் இருக்கிறது. முழுநீள ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதற்கு இன்னும் பெயரிடவில்லை. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது.

The post மீண்டும் இணைந்த தசரா கூட்டணி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: