கிருஷ்ணாபுரம் பிரம்மசக்தி கோயில் கொடை விழா

செய்துங்கநல்லூர்: கிருஷ்ணாபுரம் பிரம்ம சக்தியம்மன் கோயிலில் கொடை விழா நடந்தது. முதல் நாள் காலை சிறப்பு பூஜைகள், மதியம் சிறப்பு தீபாராதனையும் சங்குமுகம் தீர்த்தம் எடுக்க செல்லுதல் நடந்தது. மாலை புனித தீர்த்தம் எடுத்து வந்து கும்பம் ஏற்றுதல், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு மாக்காப்பு அலங்கார பூஜை நடந்தது. 2ம் நாள் காலை கணபதி ஹோமம், சக்தி ஹோமம், சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் கருங்குளம் ஆற்றில் கரகம் தீச்சட்டி மற்றும் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.  மதியம் அன்னதானம் நடந்தது. மாலை பொங்கல் இடுதல், கனி வகைகள் பூஜை, மாவிளக்கு  மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல் நடந்தது. இரவு அலங்கார பூஜை, உச்சிக்கால பூஜை,  மஞ்சள் நீராடுதல் நடந்தது. ஏற்பாடுகளை கணேசன் பட்டர், சங்கர் சிவம், கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: