ஐதராபாத்: யுபிஐ செயலி ஒன்றில் பண பரிவர்த்தனைகள் பற்றி அறிவிக்க இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ரூ.2 கோடிதான் சம்பளம். ஆனால் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கோ ரூ.5 கோடி தரப்பட்டுள்ளது. யுபிஐ மின் செயலியை சிறு கடைகள் முதல் பெரிய மால்களில் வரை வைத்திருப்பார்கள். அதை பயன்படுத்தி நாம் பணம் செலுத்தும்போது, இத்தனை ரூபாய் பெறப்பட்டதாக ஒரு குரல் அறிவிப்பு வரும்.
இந்த குரலில் பேச அமிதாப் பச்சன் மற்றும் மகேஷ்பாபுவை யுபிஐ செயலி நிறுவனம் ஒன்று அணுகியது. அதன்படி பண பரிவர்த்தனை தொடர்பாக அவர்களின் குரல்களில் அறிவிப்புகள் பதிவு செய்யப்பட்டது. இதற்காக அமிதாப் பச்சனுக்கு ரூ.2 கோடியும் மகேஷ் பாபுவுக்கு ரூ.5 கோடியும் சம்பளம் தரப்பட்டுள்ளது. மகேஷ் பாபுவுக்கு தற்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருப்பதே அவரது அதிக சம்பளத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
The post யுபிஐ செயலியில் பரிவர்த்தனை அறிவிக்க அமிதாபுக்கு ரூ.2 கோடி மகேஷ் பாபுவுக்கு ரூ.5 கோடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.