இந்த வாரம் என்ன விசேஷம்?

ஜூலை 21, சனி   

Advertising
Advertising

தருமையில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் சேரமான் பெருமான் நாயனாருடன் கயிலாயம் செல்லும் காட்சி. சிங்கிரி கோயிலில் உக்ர நரசிம்மர் பவித்ரோற்சவம் ஆரம்பம். காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் வெள்ளை யானை உற்சவம். ராமநாதபுரம் கோதண்டராமர் தேரோட்டம். மதுரை மீனாட்சி புஷ்ப பல்லக்கில் பவனி.  

ஜூலை 22, ஞாயிறு

கும்பகோணம் ஆராவமுதன் பவித்ரோற்சவ கருட சேவை. திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்.  ராமநாதபுரம் கோதண்டராமர் தோளுக்கினியானில் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. சங்கரன் கோவில் கோமதியம்மன் கனக தண்டியலில் பவனி. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்சம்.

ஜூலை 23, திங்கள்  

சர்வ ஏகாதசி. தட்சிண பண்டரிபுரம் கோவிந்தபுரம் மகாபிஷேகம். சிங்கிரி ஸ்ரீநரசிம்மர் திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். கோவர்த்தன விரதம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராஜாங்க சேவை.

ஜூலை 24, செவ்வாய்

கோட்புலியார், கலியனார், சாதுர்மாஸ்ய விரத ஆரம்பம். திருப்பதி கோவிந்தராஜர் ஜேஷ்டாபிஷேகம். சிங்கிரி நரசிம்மர் பவித்ரோற்சவம். திருமாலிருஞ சோலை கள்ளழகர் காளிங்க நர்த்தன கோலம். சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதியுலா. மதுரை மீனாட்சியம்மன் கனக தண்டியலில் பவனி. திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

ஜூலை 25, புதன்  

பிரதோஷம். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சூர்ணோற்சவம். சங்கரன்கோவில் கோமதியம்மன் ரதோற்சவம். வடமதுரை ஸ்ரீ செளந்தரராஜர் திருக்கல்யாணம். ஸ்ரீபெரும்புதூர் மணவாளமாமுனிகள் புறப்பாடு.

ஜூலை 26, வியாழன்

பவித்ர சதுர்த்தசி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வெண்ணெய்த்தாழி சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகன சேவை. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

ஜூலை 27, வெள்ளி

பெளர்ணமி. சந்திர கிரஹணம். (இரவு 11.54 மணி முதல் அதிகாலை 3.40 வரை) வாஸ்து நாள். காலை மணி 6.52 முதல்  8.22 வரை. திருவள்ளூர், காஞ்சி வரதர் தலங்களில் ஆடி கருடன். சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித் தபசு. திருமாலிருஞ்சோலை, வடமதுரை தேரோட்டம்.

Related Stories: