பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: பேரறிவாளன் விடுதலை சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பல்வேறு காரணங்களை கொண்டு சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை சம்பவத்தில் அவருடன் சேர்ந்து 17 பேர், குறிப்பாக காவல்துறை அதிகாரிகளும், காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை, மனநிலையை தமிழகத்தை ஆளும் ஆட்சியும், கட்சியும் அதனை சார்ந்த கூட்டணி கட்சிகளும் உணர்ந்து செயல்படவேண்டும். சிறையில் உள்ள மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளும் திமுகவும், கூட்டணி கட்சிகளும் தங்களின் எண்ணத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், பிரதமரின் கொடூர கொலை செயலில் ஈடுபட்ட பேரறிவாளனின் விடுதலையில் உறுதியான, உணர்வுபூர்வமான நிலையை எடுக்காமல், ஒருபுறம் ஒப்புக்கு போராட்டம் என்றும் மறுபுறம் பேரறிவாளனின் விடுதலையை பாராட்டும், கொண்டாடும் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி வைத்திருப்பது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டையே எடுத்துக்காட்டுகிறது. கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் இந்த உணர்வுப்பூர்வமான பிரச்னையில் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது பதவி நலனுக்காகவா அல்லது சுயநலனுக்காகவா, அல்லது கூட்டணி நலனுக்காகவா என்று தெரியவில்லை.இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: