மாணவர்கள் மனங்களில் மதவெறியை புகுத்த கர்நாடக பாஜ அரசு முயற்சி: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:பாஜ ஆட்சி வந்த நாள் முதல், உண்மையான வரலாறுகளை மறைத்து, மதவெறி பார்வையில் திரித்து எழுதும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகள் எழுதிக் கொடுப்பதை வரலாறாக கற்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த தந்தை பெரியார், கேரளத்தின் நாராயண குரு ஆகியோரை பற்றிய குறிப்புகளை நீக்கி விட்டனர். மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெட்கேவார் பேசியதை பாடமாக ஆக்கி இருக்கின்றனர். சமூக சீர்திருத்தம் என்ற பெயரில், முழுக்க முழுக்க மதச்சார்பு அமைப்புகளை பற்றி எழுதி இருக்கின்றனர். முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து வன்முறைகளை தூண்டி, மாணவர்கள் மனங்களில், மதவெறியை புகுத்த முனைகின்ற கர்நாடக பாஜ அரசின் முயற்சிகளை மதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். …

The post மாணவர்கள் மனங்களில் மதவெறியை புகுத்த கர்நாடக பாஜ அரசு முயற்சி: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: