குதிரைவாலி மசாலா முறுக்கு

தேவையானவை:

குதிரைவாலி அரிசி மாவு     ஒரு கப்

கடலை மாவு ஒரு கப்

வெண்ணெய் ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 2,

மிளகு அரை டீஸ்பூன்

சீரகம் ஒரு டீஸ்பூன்

ஓமம் அரை டீஸ்பூன்,

புதினா இலை ஒரு கைப்பிடி

பூண்டு 3 பல்

உப்பு தேவைக்கேற்ப

எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், ஓமம், பூண்டு, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அகலமான பாத்திரத்தில், அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெய், அரைத்த விழுது ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, முறுக்கு மாவு பதத்துக்கு நன்கு பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், ரிப்பன் பக்கோடா அச்சில் மாவைப் போட்டு, எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் கர கர வென்று நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

Related Stories: