வைர முனியப்பன் கோயிலில் தீமிதி விழா

சேலம்: சேலம் டவுன் வன்னியர் குல சத்திரியர் தெருவில் உள்ள வைர முனியப்பன், வைர காளியம்மன் கோயில் திருவிழா, கடந்த 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை, தீமிதி விழா நடந்தது. இதனால், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள், நேர்த்திக்கடனாக அக்னி குண்டம் இறங்கினர். இக்கோயிலில் இன்று(25ம் தேதி) மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், நாளை இரவு 8 மணிக்கு சத்தாபரணமும் நடக்கிறது. நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

Related Stories: