மேல்கரை சித்தி வினாயகர், சுந்தரம்மன் கோயில் விழா

நாகர்கோவில்: மேல்கரை ஸ்ரீசித்திவினாயகர் கோயில் வருஷாபிஷேகம் மற்றும் ஸ்ரீசுந்தரம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. நேற்று மாலை வாஸ்து சாந்தி பூஜையும், வாஸ்து ஹோம பிரவேச பலியும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தீபாராதனை நடந்தது. இன்று காலை 4 மணிக்கு தேவதா அனுஞ்ஞை, எஜமான சங்கல்யம், விக்னேஸ்வர பூஜை, புண்யா ஹாவாஜனம், பஞ்சகவ்ய பூஜை, வேதிகா அர்ச்சனை, மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம்,  மூர்த்தி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து 7.30 மணிக்கு ஸ்ரீசுந்தரம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். 10 மணிக்கு ஸ்ரீசித்தி வினாயகருக்கு மகா அபிஷேகம், பகல் 12மணிக்கு தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 7 மணிக்கு சந்தணகாப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

Related Stories: