கள்ளக்குறிச்சி : விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் சுகந்தன் தலைமையில் கள்ளக்குறிச்சி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் ஆகியோர் கள்ளக்குறிச்சி நகர பகுதியான கச்சிராயபாளையம் சாலை மற்றும் சங்கராபுரம் செல்லும் சாலை பகுதியில் உள்ள பழக்கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அதில் சங்கராபுரம் சாலை பகுதியில் ஒரு பழக்கடையின் குடோனில் செயற்கை முறையில் கல்வைத்து மாம்பழம் பழுக்கவைத்தது கண்டுபிடிக்கப்பட்டு 40 கிலோ மாம்பழம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்து நோட்டீஸ் வழங்கினர். இதில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. …
The post கள்ளக்குறிச்சி அருகே கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழம், புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.
