மாநகர பஸ்சில் ரூ.1,000 மாதாந்திர பயண அட்டை இன்றும், நாளையும் வழங்கப்படும்: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், அன்பு ஆபிரகாம்  வெளியிட்ட அறிக்கை:  மாநகர போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயணச் சலுகை அட்டை விற்பனை மையங்களில், ஒவ்வொரு மாதமும், 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000 மதிப்பிலான மாதாந்திர பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது.எனினும், கடந்த 14 ம் தேதி  முதல் 17ம் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக, பயணிகள் நலன் கருதி மாதாந்திர சலுகை பயணச்சீட்டுகளை 23.04.2022 மற்றும் 24.04.2022 ஆகிய இரு நாட்களுக்கு நீட்டித்து, அனைத்து மாநகர போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச் சீட்டு விற்பனை மையங்களிலும் வழங்கப்படும். பயணிகள் ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டையை வழக்கம்போல் நீடிக்கப்பட்ட 23.04.2022 மற்றும் 24.04.2022 தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post மாநகர பஸ்சில் ரூ.1,000 மாதாந்திர பயண அட்டை இன்றும், நாளையும் வழங்கப்படும்: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: