நான் பா.ஜ.வில் இல்லை கே.பாக்யராஜ் விளக்கம்

சென்னை திரைப்பட இயக்குனர் கே.பாக்யராஜ், சென்னையில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது ‘பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் 3 மாத குறை பிரசவத்தில் பிறந்தவர்கள். குறை பிரசவத்தில் பிறந்தவர்களுக்கு வாய், காது இருக்காது. எனவே அதை பற்றி கவலைப்பட தேவையில்லை’ என்று கூறினார். அவரின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக இணையதளங்களில் பாக்யராஜுக்கு எதிராக பலரும் கருத்து வெளியிட்டு வந்தனர்.இப்பேச்சு வைரலான ஒரு மணி நேரத்தில் கே.பாக்யராஜ் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில்  கூறியிருப்பதாவது: குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நான் கூறிய வார்த்தை தவறான அர்த்தத்தில் பரவி விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மாற்றுத்திறனாளிகள் மீது எனக்கு மிகுந்த அக்கறை உண்டு. நான் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் பாஜவை சேர்ந்தவன் அல்ல. தமிழில் படித்து வளர்ந்தவன். தமிழ்தான் இந்த இடத்தில் உட்கார வைத்திருக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞரின் திராவிட இயக்க கருத்துகளை கேட்டு வளர்ந்தவன். என் படங்கள் மூலமாகவும் திராவிட கருத்துகளை வலியுறுத்தி வந்திருக்கிறேன். இனியும் திராவிட இயக்க கருத்துக்களுடன்தான் என் பயணம் தொடரும். …

The post நான் பா.ஜ.வில் இல்லை கே.பாக்யராஜ் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: